நெதர்லாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரி 34 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி, சிம்பாப்வே அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

அடிலைய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அவ்வணி சார்பாக மேக்ஸ் ஓடவுட் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் குழு 2இல் ஏற்கனவே வெளியேறியுள்ள நெதர்லாந்து அணி 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

Leave a Reply