சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனகள் முன்னெடுப்பு

<!–

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனகள் முன்னெடுப்பு – Athavan News

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டுடிருந்தார்.

மேலும் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு , சுற்று சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.


Leave a Reply