எகிப்தில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகாஹ்லியா மாகாணத்தில் (சனிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றது.
பேருந்தின் சுக்கானில் ஏற்பட்ட கோளாறே குறித்த விபத்துக்கு காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





