கந்தளாய் குளத்தில் T 56 துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு.!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சின்னக்குளம் பகுதியில் T56 துப்பாக்கியின் தோட்டாக்கள் 110  நேற்று(10) மாலை  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்தஇரகசியத் தகவலையடுத்து இவ்வாறு துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 110 மீட்கப்பட்டுள்ளது.

 கந்தளாய் சின்னக்குளம்பகுதியில் குப்பைக்குள் மறைத்து வைத்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .  

 காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.  

மேலதிகவிசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply