கொழும்பில் பயங்கர வெடிப்பு – ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்

கொழும்பு, பாதுக்கை மீபே பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (30) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்புச் சம்பவத்தினால் தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் மசகு எண்ணெயைச் சேமிப்பதற்காக, ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் தாங்கி ஒன்றைச் சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலிருந்து அகற்றப்பட்ட குறித்த தாங்கியில் எஞ்சியிருந்த எரிபொருளை முழுமையாக அகற்றாமல், எரிவாயுவைப் பயன்படுத்தி அதனை வெட்ட முயன்றபோதே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு ஆண் ஊழியர்கள் வெடிப்பினால் காயமடைந்துள்ளனர்.

மேலும், வெடிப்பின் தாக்கத்தினால் கூரை ஓடு ஒன்று தலையில் விழுந்ததில் பெண் ஊழியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply