நாவற்குடா தெற்கில் 69 பேருக்கு கொரோனா; முடக்கப்பட்ட பிரதேசம்

மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள நாவற்குடா தெற்கு பகுதியில் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு தொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதி கிராமசேவகர் பிரிவு நேற்று முதல் முடக்கி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் உதயகுமார் தெரிவித்தார் .

குறித்த பகுதியில் கடந்த 2 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் 69 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்களை உடனடியாக கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் அங்கிருந்து எவரும் வெளியே வவும் உள்ளே நுழையவும் முடியாதவாறு பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply