ஆர்ப்பாட்டத்தில் கைதான 44 பேர் தொடர்பில் வெளியான தகவல்

ஆர்ப்பாட்டத்தில் கைதான 44 பேர் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 44 பேரில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகவில்லை.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், சம்பல முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர்கள் நேற்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 16 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு நேற்றைய தினம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவர்களை இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *