தமிழகக் கடற்கரையில் சிக்கிய நான்கு இலங்கையர்கள்! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் திட்டம்!

இந்தியாவின் தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் படகு மூலம் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த  நால்வர்  இன்று அதிகாலை தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில் படகு மூலம் தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள்  நால்வரையும் ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த  நால்வரும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகத் தமிழகத்திற்குச் செல்வதற்காகப் படகு மூலம் அழைத்துச் செல்லும் நபர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகத்திற்குள் நுழைந்த பின்னர் புதுடெல்லிக்குச் சென்று, அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று லண்டனுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில்  நால்வரிடமும் கியூ பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply