வாட்ஸ்ஆப்பில் ’பார்த்தவுடன் மறைந்துவிடும்’ ‘வியூ ஒன்ஸ்’ என்ற புதிய அம்சம் அறிமுகம்
வாட்ஸ்ஆப் நிறுவனம் ‘வியூ ஒன்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கிறது.
விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வியூ ஒன்ஸ் வசதி கிடைக்கப்பெறும் என்று, வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் சாட்டில் இருந்து மறைந்துவிடும்.
மேலும் பெறுபவரின் கேலரியில் புகைப்படமோ, வீடியோவோ சேமிக்கப்படாது. இதுதவிர, வாட்ஸ்ஆப்பின் வழியாக மற்றொருவருக்கும் அவற்றை அனுப்ப முடியாது.
புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்புவதற்கு முன்னதாக, கேப்ஷன் பார் அருகில் தோன்றும் ஒன்று என்ற ஐகானை பயன்படுத்துவதன் மூலம் வியூ ஒன்ஸ் வசதியை பயன்படுத்த முடியும்.