வைத்தியர்களுக்கும் 60 வயதில் கட்டாய ஓய்வு – நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று டிசம்பர் 14 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி 2023 ஜனவரி 25, வரை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு 60 வயது கட்டாய ஓய்வு வயது விதிக்கப்படாது.

176 விசேட மருத்துவ நிபுணர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் பின்னர் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் 5 அன்று, பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் வெளியிட்டார்.

Leave a Reply