ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சி அமைத்து ஒருவருட காலம் பூர்த்தியாகிவிட்டது.
இத்தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு தங்களது ஆசிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோமென சர்வ மதத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாக இந்த அரசாங்கம் பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தாக்குதலுக்கும் முழு நாடும் உள்ளாகியது.
இத் தருணத்தில் மக்களை முடிந்தளவில் அவற்றிலிருந்து காப்பாற்றி சிறந்த திறமையான ஆட்சி நடத்துவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இது மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கம், அதனால் மக்களுக்கு முன்னுரிமையளித்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
மிகவும் புத்தி சாதூர்யமாக நடந்து நாடு எதிர்கொள்ள இருந்த பல இன்னல்களிலிருந்து நாட்டு மக்களை விடுவித்து வெற்றிகரமாக இந்த அரசாங்கம் தனது பயணத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை, மக்கள் நலன் கருதி மக்களுக்காக இந்த அரசாங்கம் செயற்படும் என்ற நம்பிக்கையில் அரசியல் தலைமைகளுக்கு எங்களது மும்மணிகளின் ஆசிகளை கூறி ஆசீர்வாதம் அளிப்பதாக பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.