தமிழகத்தில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும், அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் ஜனவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply