இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய இரண்டு வீரர்கள் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதானால் அவர் இந்த போட்டியில் பங்கு பற்ற மாட்டார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு, வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஓய்வு பெறுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிறைவேற்றுக்குழு மூன்று முக்கிய தீர்மானங்களை இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, ஓய்வு பெறும் நோக்கில் உள்ள தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மூன்று மாதத்திற்கு முன்னர் அது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஓய்வு பெற்ற வீரர்கள் வெளிநாட்டுத் தொடர் ஒன்றில் விளையாடுவதற்கான அனுமதி ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்த பின்னரே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற வீரர்கள் LPL தொடர்களில் விளையாடுவதற்கான அனுமதி, அதற்கு முன்னர் ஒழுங்கு செய்யப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் 80% போட்டிகளில் விளையாடினால் மாத்திரமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





