
இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சுகாதார செயற்பாடுகளே பிரதானiமானவை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது நிறுவனங்கள், அலுவலகங்கள், அங்காடிகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களின் கட்டாய கடமையாக வேண்டும்.
ஒமிக்ரான் தொற்றின் பரவலை அடுத்து அண்டை நாடான இந்தியா உட்பட்ட நாடுகளில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது.
எனவே, இலங்கையிலும் தொற்று அதிகரிக்காது என்று கூறமுடியாது. எனினும் சுகாதார சேவையினருக்கு கட்டுப்படுத்தும் அளவில் தொற்று எண்ணிக்கையை வைத்துக்கொள்ளும் போது கடும் சுகாதார நடவடிக்கைகளுக்கு செல்லத் தேவையில்லை.
இந்நிலையில், இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து வருவோரிடம் உரிய பிசீஆர் ஆவணங்கள் கோரப்படுகின்றன.
தற்போதைய நிலையில் இலங்கையில் ஐயாயிரம் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை நிர்வகிக்கும் திறன் சுகாதாரத்துறையினருக்கு உள்ளது
எனினும், அந்த நிலைமைக்கு செல்லாமலிருக்க சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகும் – என்றார்.





