ஒரு தீக்குச்சியால் பரவிய தீ; வீடு முழுவதும் எரிந்து நாசம்

மாத்தளை – நாகொல்ல பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப் பெட்டி தயாரிக்கும் கைத்தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த வீட்டில், பொதி செய்யும் பணியின் போது தீக்குச்சு ஒன்றில் தீ பரவியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

எனினும், வீட்டிலிருந்த பல உடமைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

விபத்து தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply