பொதுமக்களின் அமளிதுமளியால் திரும்பி சென்ற எரிவாயு வாகனம்

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் உள்ள கடைகளுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்ட எரிவாயு வாகனம் பொதுமக்களின் அமளிதுமளியையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகனம் சில கடைகளுக்கு மாத்திரம் எரிவாயுனை விநியோகிப்பதற்கு வந்தவவேளை பொதுமக்கள் சிலர் தங்களுக்கும் தருமாறு எரிவாயு விநியோகிப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து எரிவாயு வாகனம் முழுமையாக எரிவாயுனை இறக்காமல் இடைநடுவில் திரும்பிச் சென்றது.

எரிவாயு பெறவருகை தந்தவர்கள் எரிவாயுனை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

குறித்த இடத்தில் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற தோப்பூர் பொலிஸார் பொதுமக்களின் குழப்ப நிலையை அமைதி நிலைக்குக் கொண்டு வந்ததோடு எரிவாயு வாகனத்தினையும் திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply