நாயாற்றுக்கரையில் இராட்சதப் பொருள்!

செம்மலை நாயாற்று கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் இராட்சதப் பொருள் நேற்றுக் காலை கரையொதுங்கியுள்ளது.

நேற்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள், இராட்சத இரும்புப் பொருள் கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர். கரை ஒதுங்கியுள்ள இரும்பு பொருளை கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்ட பின்னர், பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த இராட்சத இரும்புப் பொருள், பாதைக் கப்பலாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகின்றது.

Leave a Reply