பள்ளத்தில் பாய்ந்தது ஓட்டோ! – சாரதி உட்பட மூவர் காயம்

ஹப்புத்தளை – வெலிமடை பிரதான பாதையில் ஓட்டோ ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டோ பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன், உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

ஓட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூவருக்குக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply