ஒமிக்ரான் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்: அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்! ஆசிரியர் சேவை சங்கம்

ஒமிக்ரான் பரவலுக்கு மத்தியில் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்குத் திரும்ப அழைக்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கல்வித்துறையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர்களை பாடசாலைகளுக்கு மீள அழைப்பது தொடர்பான தீர்மானங்கள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்கும் முடிவின் விளைவாக பிரச்சினைகள் எழுந்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதி பற்றாக்குறை! திலும் அமுனுகம

Leave a Reply