எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது! மைத்திரி

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், சமூக முற்போக்கு, நேர்மையான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டணியாக எதிர்வரும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எந்தவொரு தனிநபராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது.

மாகாணசபைத் தேர்தல்கள் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட ஆரம்பத்திலோ நடத்தப்படும் என குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலாகவே அமையும் என மேலும் தெரிவித்தார்.

பிரபாகரன் மீண்டும் வருவார் – மூத்த சட்டத்தரணியின் உணர்ச்சிப் பேச்சு (வீடியோ)

Leave a Reply