<!–
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் சில மாதங்களில் நாட்டின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அந்தவகையில் சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தேர்தலை ஒருபோதும் பிற்போட கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






