திருமலையில் எண்ணெய்க்குத ஒப்பந்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திருகோணமலையில் எண்ணெய்க்குத ஒப்பந்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் பணித்தளங்களில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

திருகோணமலை எண்ணெய்க்குத வளாகத்துக்கு எதிரே இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் ஜனவரி 6ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த 99 குதங்களில் 85 குதங்கள் இப்போது இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த உடன்படிக்கை நாட்டின் பல துறைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 877 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் நெறிமுறையற்றதாகவும், சட்டவிரோதமாகவும் விற்பனை செய்துள்ளதாகவும், இது முந்தைய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை விட பாரிய துரோகம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் குறித்து அமைச்சர்கள் அமைச்சரவைக்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ தெரிவிக்கவில்லை.

இந்த உடன்படிக்கையானது தேசிய பாதுகாப்புக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் மீண்டும் வருவார் – மூத்த சட்டத்தரணியின் உணர்ச்சிப் பேச்சு (வீடியோ)

Leave a Reply