
வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணமாக ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொரு சடலம் பம்பலப்பிட்டி மரைன் டிரைவ் கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு இவர்களின் மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





