
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் மட்டுமே முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று நம் நாட்டில் பல விதமான பொருளாதார பிரச்சினை இருக்கிறது.
அவற்றை நிவர்த்தி செய்ய நம் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாச ஒருவரால் மட்டுமே முடியும்.
மைத்திரிபால சிரிசேன ஆட்சியின் போது ஐக்கிய தேசியக் கட்சி பெரும் உதவியை வழங்கியது. எனினும், அவர் திடீரென மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார்.
மீண்டும் அவர் ஜனாதிபதியாக வந்தால் அவ்வாறான நடவடிக்கையையே மேற்கொள்வார்.
எனவே, இந் நாட்டிற்கு சிறந்த தலைவர் நம் சஜித் பிரமதாச மட்டுமே – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





