இலங்கையுடனான உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த சீனா எதிர்பார்ப்பு! வாங் யீ தெரிவிப்பு

இலங்கையுடனான உறவுகளை புதிய அத்தியாயத்துக்கு கொண்டு செல்லவும், பொதுவான அபிவிருத்தி மூலோபாய பங்காளித்துவத்தை ஆழப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையுடன் கைகோர்க்க சீனா தயாராக உள்ளது என்று பீஜிங்கில் வெளியிட்ட அறிக்கையில் வாங் யி தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு ஒத்துழைப்பில் இலங்கை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தின் முதற்கட்டப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு தயாராக உள்ளன.

இலங்கைக்கு நன்மைகளை கொண்டு வரும் கொழும்பு துறைமுகத்தின் எங்களின் கூட்டு நடவடிக்கை சாதனையாக அமைந்தது.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கை தலைவர்களுடன் வாங் யீ கலந்துரையாடியதாக கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்த தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தீர்மானம்!

Leave a Reply