
கிணற்றில் நீர் அள்ளச் சென்ற பெண் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மிருசுவில், உசனில் நடந்துள்ளது.
வரதராஜன் திலகேஸ்வரி (வயது-57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
அருகில் உள்ள வீடொன்றில் கிணற்றில் நீர் அள்ளச் சென்றபோதே இவர் கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிணறு உள்ள வீட்டின் உரிமையாளர் மீசாலையில் வசிக்கும் நிலையில், தனது காணியைப் பார்க்கச் சென்றபோது, கிணற்றில் சடலம் இருப்பதை அவதானித்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.





