
ஐஸ்கிரீம் மற்றும் யோகட் உற்பத்தி விகிதத்தை குறைத்து திரவ பால் மற்றும் பால்மா உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடமாடும் சேவையின் ஊடாக திரவப் பாலை விநியோகிக்கும் முயற்சி உட்பட நாளாந்த பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை இராஜாங்க அமைச்சரான டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும்,அது பால் பண்ணையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய அரசு கவிழ்வது உறுதி! – அது எப்போது என்று இப்போது கூறமுடியாது என்கிறார் விமல்





