சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு: இளைஞன் கைது!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் இரு சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் ஒருவரை இன்று முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

ஹிச்சிராபுரத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரைய இவ்வாறு கைது செய்துள்ளனர்.

குறித்த இரண்டு சிறுவர்களின் மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி செய்துள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply