
தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த மூன்று கட்சிகளை அங்கீகரித்து பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுனால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந் நிலையில் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய லங்கா சுதந்திர கட்சி என்ற கட்சியும் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





