
ராஜகிரிய விபத்து தொடர்பான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு, பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த கோரிக்கை மேல் முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வருடம் செப்டெம்பர் 29ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரின் சாரதி மற்றும் வெலிக்கடை காவற்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கு தடையைக் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து, ராஜகிரிய விபத்து தொடர்பான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு, பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





