யாழ். பருத்தித்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை – துன்னாலை தக்குசம்பாதி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பாஸ்கரன் காண்டீபன் என்பவரே கைப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply