திருச்சி தடுப்பு முகாமில் இலங்கையர்கள் – விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் தம்மை விடுவிக்க கோரி, இலங்கையில் உள்ள இந்திய தூதரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

முகாமில் சுமார் 100க்கும் அதிகமான இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50 க்கும் அதிகாமானவர்கள் மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதுவரை நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்தமை, கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்தமை போன்ற காரணங்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 3 வருடங்களாக அல்லல் படுகின்றோம். எம்மை விடுதலை செய்து குடும்பத்துடன் வாழ வழி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் அனைவரும் கையெழுத்து இட்டு அனுப்பிவைத்துள்ளனர்.

Leave a Reply