
கடந்த ஆண்டு (2021) உலகின் ஐந்தாவது வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு 2021 ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் உள்ள CO2 மற்றும் மீத்தேன் வாயுக்களின் அளவுகள் புதிய உச்சத்தை எட்டியதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) திங்களன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் விஞ்ஞானிகள் இதனை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் உலகின் வெப்பமான “தெளிவான வித்தியாசத்தில்” இருந்ததாகவும், 2021 இல் சராசரி உலக வெப்பநிலை 1850 ஆம் ஆண்டை விட 1.1 முதல் 1.2 பாகை செல்சியசாக இருந்ததாக அறிக்கை தெரிவிக்கின்றது.
இதன் படி, வெப்பமான ஆண்டுகளாக 2020 மற்றும் 2016 ஆண்டுகள் பதிவாகியுள்ளன.
2015 பாரிஸ் உடன்படிக்கைக்கு அமைய உலக வெப்பநிலை உயர்வை 1.5 செல்சியசாக கட்டுப்படுத்த முடியுமானால், அதன் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எனினும் அதற்கு 2030க்குள் வெப்ப உமிழ்வுகள் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும், எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் 2021 இல் உலகம் முழுவதும் பரவும் பல தீவிர வானிலை நிகழ்வுகளை மோசமாக்கியது, ஐரோப்பா, சீனா மற்றும் தெற்கு சூடானின் வெள்ளம், சைபீரியா மற்றும் அமெரிக்கா காட்டுத்தீ ஆகியன இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இதனிடையே, 2020 இல் கொவிட் தொற்று பரவலின் தொடக்கத்தில் ஒரு தற்காலிக வீழ்ச்சிக்குப் பிறகு, 2021 இல் உலகளாவிய CO2 உமிழ்வுகள் 4.9% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





