எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்தம் மிகவும் பாதகமானது! ஐ.தே.க ஜனாதிபதிக்கு கடிதம்

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மிகவும் பாதகமானவை என ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் அரசியல் மற்றும் தொழிநுட்ப ரீதியாக பல தவறுகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகளை விட, புதிய ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மிகவும் பாதகமானவை.

முறையான அனுமதியின்றி கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகாது எனவும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அனுமதியின்றி திருகோணமலை துறைமுகம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளில் வேறு எந்த நிறுவனமும் ஈடுபட முடியாது என்ற நிபந்தனையும் அரசமைப்பை மீறியுள்ளது.

இதற்கு அமைச்சரவையில் கூட உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியின்றி குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் காணி ஆணையாளர் மக்களின் இறையாண்மையை மீறியுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply