எல்லைப் பிரச்சினை : 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தைக் குறித்த அறிவிப்பு!

இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை சூசுல்-மோல்டா அருகே நடைபெறவுள்ளது. இதில் இரண்டு நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனா குவித்துள்ள படைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆவது சுற்று பேச்சுவார்த்தையின்போது எல்லைப் பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காணவும், வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் இந்தியாவுடன் சீனா உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply