ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் இத்தாலியில் மரணம்!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி, செவ்வாய்கிழமை அதிகாலை இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக அவரது செய்தித் தொடர்பாளர் Roberto Cuillo உறுதிப்படுத்தியுள்ளார்.

65 வயதான இவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சலோலி, ஜனவரி 11ம் திகதி அதிகாலை 1.15 மணிக்கு இத்தாலியின் Aviano-வில் மருத்துவமனையில் காலமானதாக அவரது செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டேவிட் சசோலி 2019 முதல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவராகச் செயற்பட்டு வருகின்றார்.

இதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்பு கடந்த செப்டம்பரில் பல வாரங்களுக்கும் அதிகமாக நிமோனியாவால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டேவிட் சசோலி, 1956 இல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இத்தாலியில் பத்திரிகையாளராக 30 வருட காலம் இவர் பணியாற்றினார்.

இதற்குப் பிறகு, செய்தித்தாள்களில் தொடங்கி பின்னர் தொலைக்காட்சிக்குச் சென்று தேசிய அளவில் அறியப்பட்ட தொகுப்பாளராக இவர் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து 2009 இல் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2019 இல் சபாநாயகராகவும் ஆனார்.

சசோலி மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஜனாதிபதி சஜித் – நளின் பண்டார தெரிவிப்பு

Leave a Reply