அக்போபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

திருகோணமலை – அக்போபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

அக்போபுர பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை, கொழும்பிலிருந்து திருகோணமலை பகுதிக்குச் சென்ற வேன், மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூதூரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்!

Leave a Reply