அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவத்தால் மக்கள் கடும் சுமைக்கு உள்ளாகியுள்ளனர்! ரஞ்சித் மத்தும

வர்த்தகர்களிடம் இருந்து தரகுப்பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களினால் பொதுமக்கள் பாரிய சுமைக்கு ஆளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை அமைப்பதற்கு 0.5சதவீதம் வட்டிக்கு பதிலாக சீனாவின் நுஓஐஆ வங்கியிடமிருந்து 8 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் பெறப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் போன்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து தரகுப்பணம் பெற முடியாத காரணத்தினால் அரசாங்கம் கடன்களை பெறவில்லை.

தரகுப்பணம் பெறப்படும் போது அதிக விலைக்கு இறையாண்மை பத்திரங்கள் கொள்வனவுச் செய்யப்பட்டது.

நிலக்கரி, எண்ணெய், வரி, விமானங்கள் மற்றும் சுனாமி நிதி போன்ற திட்டங்களில் இருந்து அரசாங்கம் நிதி திருடுகின்றது.

உணவு நெருக்கடி தவிர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிவாயு, பால்மா மற்றும் எரிபொருளின் நிலையான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டு. மின்வெட்டு என்பது பொதுமக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு கவலை.

தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கம் வெட்கமின்றி கொரோனாத் தொற்றுநோய் மீது குற்றம் சுமத்துகின்றது.

இது அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply