மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும்! சிவநேசதுரை சந்திரகாந்தன்

மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடப்பட்டமையானது நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையினை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவினை அவர் எடுத்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு அச்சப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை.

கொரனா அச்சுறுத்தலுக்கு பின்னர் மக்களின் நிலையினைக்கொண்டே இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்த நிலைமை சுமுகமானதும் நிச்சயமாக விரைவில் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெறும்.

ஆனால் மாகாணசபை தேர்தல் வருடக்கணக்கில் பிற்போடப்படும் என்று எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

ஆனால் இந்த வருட நடுப்பகுதியில் அல்லது இறுதிப்பகுதியில் நடைபெறும் என்று நான் கருதுகின்றேன்.

Leave a Reply