
காலாவதியான தடுப்பூசிகளை ஒருபோதும் மக்களுக்கு வழங்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடப்படும் காலத்தைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுகிறது.
காலாவதியான தடுப்பூசிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை.
நாட்டிற்குக் கொண்டு வரப்படும் பெரும்பாலான தடுப்பூசிகளை இவ்வருடம் ஜூலை, ஓகஸ்ட் மாதம் வரை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





