கொழும்பில் கைக்குண்டு – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் CID விசாரணை!

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தற்போது கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் அமைந்துள்ள பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வலதுபுறம் உள்ள சிலைக்கு அருகில் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதா? பெப்ரல் அமைப்பு கேள்வி

Leave a Reply