சர்ச்சைகளுக்குப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்

<!–

சர்ச்சைகளுக்குப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம் – Athavan News

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எச்.டி கருணாரத்ன இன்று (புதன்கிழமை) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை ஜனாதிபதி முன்னர் நியமித்திருந்தார்.

அதன் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் சிலர் தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Leave a Reply