திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை நாமே வளப்படுத்தலாம் – ஜே.வி.பி

நாட்டு மக்களுக்கு தெரியமால் திருகோணமலை எண்ணெய் கிடங்குகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கோட்டாபயவின் ஆட்சியில் மக்களிற்கு அறிவிப்பு இன்றி , திருகோணமலை எண்ணெய் கிடங்குகள் இந்தியாவிற்கு விற்கப்பட்டுள்ளது.

ஏக்கர் கணக்கான எண்ணெய் கிடங்குகள் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளது.

இதன் போது இந்தியாவிற்கு 14 எண்ணெய் கிடங்குகளையும், இலங்கையிற்கு 24 எண்ணெய் கிடங்குகளையும், 61 எண்ணெய் கிடங்குகள் இலங்கை மற்றும் இந்திய பாவனைக்கும் வழங்கப்பட உள்ளன.

டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இத் தீர்மானத்தை எடுத்துள்ளோம் என அரசு தெரிவித்துள்ளது.

எண்ணெய் என்பது உலகிலே ஒரு சிறந்த வளம். ஒரு நாடு எண்ணெய் சுயமாக உற்பத்தி செய்ய முடிவில்லை என்றால் அந் நாடு ஒரு சிறந்த நாடாக கருத முடியாது.

விசேடமாக நாம் அறிந்தது திருகோணமலை துறைமுகம் இயற்கை துறைமுகமாக காணப்படுகிறது.

எண்ணெய் கிடங்குகள் உள்ள வளமான பிரதேசம். எனவே அவற்றை நாம் வளப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply