
எதிர்வரும் நாட்களுக்கான ஆசன முன்பதிவுகள் நேற்று முதல் இடம்பெறமாட்டாது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தூர சேவை புகையிரதங்களை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர்.
இதனால் புகையிரத பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்வரும் நாட்களுக்கான முன்கூட்டிய ஆசன பதிவுகளை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கான ஆசன பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்!





