நாகவத்தை கடலில் காணாமல் போன இரு மாணவர்களும் சடலமாக மீட்பு

தைப்பொங்கல் தினத்தன்று கடலில் மூழ்கி காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடலில் குளிக்கச்சென்று காணாமற்போன மாணவர்கள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகவத்தை கடற்பகுதியில் நேற்று முன்தினம் (14) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் 7 பேர் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார்.

நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த ஏனைய இருவரும் நேற்று மாலையும், இரவும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதேவேளை, களுகங்கையில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

களு கங்கையில் மீட்கப்பட்ட இரு சடலங்கள்; சிறுவன் மாயம்

Leave a Reply