
புதிய 04 மேம்பாலங்களை அமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு, இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி ஒத்துழைப்புடன் புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
முத்தெட்டுகல ரயில் கடவை மற்றும் ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மரிஸ்டெல்லா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி ஆகிய இடங்களில் புதிய பாலங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க இவ்வாறு மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஹங்கேரியின் எக்சிம் வங்கி மூலம் நிதி வழங்குவதற்காக ஹங்கேரி அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, கொஹுவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்கள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





