புத்தளத்தில் கோர விபத்து: ஒருவர் ஸ்தலத்தில் பலி!

புத்தளம் – கல்லடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குருநாகலிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் கல்லடி பகுதியிலிருந்து ஆனமடுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டதுடன், லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் சிராம்பையடி சின்ன நாகவில்லு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply