
வடமாகாண சுகாதார பணி உதவியாளராக நியமனம் வழங்கப்பட்டு, இதுவரை சேவைக்கு அழைக்கப்படாதவர்கள் கொழும்பில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறித்த நபர்கள் அரசு தரப்பில் முக்கியமானவர்களை சந்தித்து கலந்துரையவுள்ளனர்.
இதே வேளை ‘நியமனம் எங்கே’, ‘மூன்று முறை நேர்முக தேர்வு எதற்கு’. ‘நியமன கடித்ததுக்கு பதில் வழங்கு’ ஆகிய வாசகங்களை ஏந்திவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிய நிலையில், கடந்த தேர்தலுக்கு முன்னர் அணைத்து நியமனங்களும் இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.






