இயற்கை விவசாயத்தால் விவசாயிகளுக்கு சிரமம்! ஒப்புக்கொண்டார் மஹிந்தானந்த

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகாரிகளால் இயற்கை விவசாயம் தொடர்பில், விவசாயிகளுக்கு உரிய முறையில் அறிவிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தக் குறைபாடுகளால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதை ஒப்புக்கொண்டார்.

மேலும், பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் நெல் விலை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

பசுமை விவசாயத்தில் பல குறைபாடுகள் உள்ளது. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

எதிர்வரும் யால பருவத்தில் இக்குறைபாடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நேரத்தில் உரங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தண்ணீரூற்று பொதுச்சந்தை காவலாளி மீது தாக்குதல்!

Leave a Reply