புதிய ஆண்டிலாவது கோட்டாவுக்கு நல்ல புத்தி வர வேண்டும்! – ராஜித

இந்த புதிய ஆண்டிலாவது நாட்டு மக்களை பற்றி இந்த அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார வீழ்ச்சியினால் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்படும். இந்த வீழ்ச்சிக்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல.

நாட்டில் பால்மா இல்லை, காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது, எரிவாயு பற்றாக்குறை, எரிபொருள் இல்லை, உர பற்றாக்குறை, மருந்துகள் இல்லை, அதே போல கட்டட பொருட்கள் விலை உயர்வு என்பன ஏற்பட்டுள்ளது.

கட்டட பொருட்கள் விலை உயர்வினால் வேலை செய்பவர்களிற்கு வேலை இல்லாமல் போய்யுள்ளது.

மற்றும் உரம் பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏனென்றால்உரம் பெற டொலர் இல்லை.

87 சதவீதமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

இந்த நிலையில் வியாபாரிகள் மக்களை கவனத்தில் கொள்ளாது, அதிக இலாபத்தில் பொருட்களை விற்பதற்கு முயல்கின்றனர்.

வீதியில் மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்குகின்றனர். என்ன அரசாங்கம் இது.

எனவே, 2022 ஆம் ஆண்டு என்றாலும் மக்களை பற்றி அரசு சிந்திக்க வேண்டும். – என்றார்.

Leave a Reply